மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் காத்தான்குடி, ஆரையம்பதி, வெல்லாவெளி களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உழியர்கள் உட்பட 24 பேர் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டடுள்ளது.
மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 420 அதிகரித்துள்ளதாக இன்று புதன்கிழமை (13) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொண்டுவரும் எழுந்தமானமாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் காத்தான்குடி, ஆரையம்பதி சுகாதாரப் பிரிவுகளில் தலா 4 போர் உட்பட 8 பேரும், வெல்லாவெளி சுகாதார பிரிவில் 3 பேரும், களுவாஞ்சிக்குடி சுகாதார பிரிவில் ஒருவரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 12 பேர் உட்பட 24 பேர் தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்டத்தில் 420 ஆக உயர்வடைந்துள்ளது இவர்களில் 145 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளர்.
278 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றதுடன் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் எனவே நாளாந்தம் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது,
பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளைப் பேணி அவதானமாக நடந்து கொள்ளுமாறு அவர் தெரிவித்தார்.