இலங்கையின் கிழக்கு பகுதியில் அதிகரித்த கொரொனா தொற்று

திருகோணமலை உப்புவெளி பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பாலையூற்று, பூம்புகார் கிழக்கு தண்ணீர்தாங்கி பகுதியில் இன்று வியாழக்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கும், குறித்த குடும்பம் வசிக்கும் ஒரே வளவிற்குள் வசிக்கும் ஒரு பெண் உட்பட ஐவருக்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, கொரோனா அடையாளம் காணப்படாத MOH பிரிவுகளாக திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று MOH பிரிவு மற்றும் பதவிசிரிபுர MOH பிரிவிலுமே இதுவரை எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை.

கிழக்கின் தற்போதைய அறிக்கைகளின் படி, அபாய வலயமாக கல்முனை தெற்கு அடையாளமிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் காத்தான்குடி அபாய வலயமாக இருந்தது. அங்கு கடந்த சில நாட்களாக தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நேற்றைய தினம் கிழக்கில் இதுவரை 47 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவைகளின் விபரம் வருமாறு;

கிண்ணியா – 08

கல்முனை தெற்கு – 19

சாய்ந்தமருது – 04

மட்டக்களப்பு – 06

காத்தான்குடி – 03

வெல்லாவெளி – 03

அம்பாறை – 02

தமன – 02