கேபி எடுத்துச் சென்ற 5 லட்சத்திற்கு ரியோ சண்டையிட்டது ஏன்?

பிக் பாஸ் வீட்டில் இருந்து 5 லட்ச ரூபாய் பெட்டியுடன் கேபிரியல்லா வெளியேறியுள்ளார். இன்னும் 2 நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைய போகிறது.

இந்நிலையில், நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்பட்டது. 6 போட்டியாளர்களில் யார் அந்த பெட்டியை தூக்கிக் கொண்டு செல்லப் போகிறார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், கேபி அதை கைப்பற்றினார்.

இந்த சீசனில் இந்த பணத்தை யார் எடுக்கப் போகிறார் என ரசிகர்களும், உள்ளே உள்ள போட்டியாளர்களும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், வந்த பணத்தை கை நழுவ விட்டுவிடக் கூடாது என நினைத்த கேபி, சட்டென அதன் அருகே சென்று பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.

கேபி அந்த பணப்பெட்டியை தூக்கியதும், அவர் அருகே வந்த ரியோ, அந்த பணத்தை வை கேபி என்றார். இதுவரை ரியோவுடன் சேர்ந்து ஜாலியாக சுற்றி வந்த கேபி, ரியோவின் பேச்சை கேட்க முடியாது என மறுத்தார்.

தொடர்ந்து அந்த 5 லட்ச ரூபாய் பெட்டியை வைத்து விடு கேபி நான் எடுக்க மாட்டேன். அடுத்து பத்து லட்சம் வரும் நீயே எடுத்துட்டுப் போ என ரியோ பேசிய போதும், அதை வச்சா நீ எடுத்துப்ப என ரியோவிடமும், தனியாக ஆறுதல் சொன்ன சோமிடமும், அதை வச்சா அவன் எடுத்துப்பான் என சொல்லி ரியோவை கேபி அசிங்கப்படுத்தி விட்டார் என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

கேபியிடம் இருந்து பணப்பெட்டியை வாங்க ரியோ ராஜ் ஆசைப்படவில்லை என்றும், கேபி வெளியேறுவதை தடுத்து நிறுத்தவே அப்படி பேசினார் என்றும், கேபி மீது ரியோவுக்கு அந்த அளவுக்கு நம்பிக்கையும் பாசமும் உள்ளது என ரியோவின் ரசிகர்கள் அவர் செய்த செயலை பாராட்டி வருகின்றனர்.

சனம் ஷெட்டி கடைசி வரை கேபி அருகே நின்று, பெட்டியை எடுக்காத வெயிட் பண்ணு, நல்லா யோசி என ஆறுதல் கூறினார். ரம்யா பாண்டியன், இது தான் உன் முடிவு என்றால், அது சரியாகவே இருக்கும் என விடை கொடுத்தார். பாலா, ஏன் இப்படி பண்ற, இன்னும் மூணு நாள் தான இரு என்றார். ஆனால், தனது முடிவில் மாறாது நின்ற கேபி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆனால் ரியோ பைனலில் தான் எதுவும் கிடைக்காமல் சென்றுவிடுவோம் என்ற நினைப்பில் இந்த ஐந்து லட்சத்தினை எடுத்துக்கொண்டு சென்றுவிடலாம் என்று நினைத்தும், இன்னும் சிறிது நேரம் சென்றால் 5 லட்சம் 10 லட்சம் ஆகும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்ததும் ரசிகர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரிந்துள்ளது.