பிரபல திரைப்பட இயக்குனர் சுசீந்திரனின் தாயார் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் வெண்ணிலா கபடி குழு மூலம் அறிமுகமான இயக்குனர் சுசீந்திரன், அதன் பின் நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஜீவா, பாண்டிய நாடு, பாயும் புலி போன்ற திரைப்படங்கள் மூலம் மிகவும் பிரபலமானார்.
தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். பொங்கல் தினத்தற்கு கூட இவர் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவான ஈஸ்வரன் படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். ஜெயலட்சுமிக்கு 62 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
Popular director #Suseinthiran and producer @NalluPictures @ThaiSaravanan ’s mother #Jayalakshmi (62) passed away this morning due to heart attack at Oddanchathram.
Funeral this evening..
Condolences to the family.. #RIPJayalakshmi!! pic.twitter.com/0BAVrr8niW
— Ramesh Bala (@rameshlaus) January 15, 2021