குட்டி உடையில் க்யூட் போஸ்.!

துள்ளுவதோ இளமை திரைப்படம் கடந்த 2002 ஆம் வருடத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஷெரின். இதன்பின்னர் விசில், ஸ்டூடன்ட் நம்பர் 1, உற்சாகம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இதன்பின்னர் திரைத்துறைக்கே வராமல் இருந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இடம் பெற்றார். இதன்பின்னர் மக்களின் மனதில் இடம்பிடிக்க துவங்கினார். ஷெரின் வயதுடைய பல நடிகர்களும், நடிகைகளும் திருமணம் முடித்துள்ள நிலையில், ஷெரின் தற்போது திரைத்துறையில் மீண்டும் தனது அங்கீகாரத்தை நிரூபணம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கையில் உடல் பருமனுடன் இருந்த நிலையில், தற்போது உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தை அடைந்துள்ளார். ஊரடங்கு தொடங்கியதில் இருந்து சேலை மற்றும் சுடிதாரில் பல புகைப்படத்தை உடல் எடையை குறைத்து அடுத்தடுத்து புகைப்படம் பதிவு செய்து வருகிறார்.


தற்போது, ஷெரின் சிவப்பு நிற குட்டி உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகின்றார்.