சிறுநீர்ப்பாதை மேல் சிறுநீரக பாதை மற்றும் சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் பை வரை இயங்கும் மென்மையான குழாய் உள்ளது. இதில், கீழ் பாதையில் சிறுநீர்ப்பை மற்றும் வெளிப்புறம் வரை வரக்கூடிய சிறுநீர் குழாய் இருக்கிறது. சிறுநீர் தொற்றுகள் குழந்தைகளுக்கு ஏற்படுவது தொடர்பாக பெற்றோர்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
குழந்தைகளுக்கு சிறுநீர் தொற்று ஏற்பட காரணமாக மலச்சிக்கல் மற்றும் சிறுநீரை முழுமையாக வெளியேற்றாமல் இருப்பது கூறப்படுகிறது. ஆண் குழந்தைகளை காட்டிலும், பெண் குழந்தைகள் அதிகளவு சிறுநீர் தொற்றுக்கு உள்ளாகின்றனர். பெண் குழந்தைகளுக்கு சிறுநீர் குழி குறைவாக இருப்பது மட்டுமல்லாமல், ஆசனவாயில் இருந்து வெளியேறும் பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பாதை மற்றும் யோனிக்குள் நுழைந்து தொற்று ஏற்பட காரணமாக இருக்கிறது.
அரிதிலும் அரிதாக சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக பிறப்பு குறைபாடுகள் உள்ள குழந்தைகள் யு.டி.ஐ பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். சிறுநீர் பாதை குறுகலாக இருந்தாலும், சிறுநீரை தடுத்து கிருமிகளை அதிகரிக்க வழிவகை செய்கிறது. மேலும், நீண்ட நேரம் டயாபர் மாற்றாமல் இருப்பதும், சிறுநீர் கழித்தால் பராமரிக்காமல் இருப்பதும் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் சிறுநீர் கழிக்கையில் இளம்சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் அல்லது இரத்தம் கலந்து சிறுநீர் வெளியேறுதல் குழந்தைகள் யு.டி.ஐ (Urinary Tract infections) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யும். சிறுநீர் கழிப்பதற்கு முன்னதாக அல்லது பின்னர் ஏற்படும் எரிச்சல் சிறுநீரக தொற்றின் அறிகுறியாக இருக்கும். இதனால் அடிமுதுகு மற்றும் வயிறு பகுதியில் வலி இருப்பதாக குழந்தைகள் தெரிவிக்கலாம்.
காய்ச்சல், குமட்டல் உணர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளும் உடல் உபாதையாக ஏற்படலாம். இது போன்ற அறிகுறிகள் இருக்கும் வேளைகளில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பதை கவனித்தால் நிலைமை தெரியும். உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை.
ஐந்து வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி டயப்பர் மாற்றம் செய்ய வேண்டும். முடிந்தளவு டயப்பர் அணியாமல் இருப்பது நல்லது. காற்றோட்டமான இடங்களில் பாக்டீரியாக்கள் வளர்வது தடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு அதிகளவு பழசாறு கொடுத்தல், குழந்தைகள் சிறுநீர் கழித்தும் அந்தரங்க உறுப்புகளை சுத்தம் செய்தல், காரமான மசாலா நிறைந்த பொருட்கள் மற்றும் துரித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருத்தல் போன்றவை குழந்தைகளின் சிறுநீரக பாதுகாப்பை உறுதி செய்யும்.