புளி சாறால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!!

இந்திய வகை உணவுகளில் புளிப்பு சுவையுள்ள உணவுகள் அதிகம் விரும்பப்படுவதாக இருக்கும். புளிப்பு சுவையை வழங்கும் புளி, இந்திய சமயலறையில் கட்டாயம் இருக்கும். புளியை நாம் பெரும்பாலும் உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு இருப்போம். சாறாக அருந்தியிருக்க வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கும்.

புளியை சாறு வடிவில் எடுத்து குடித்தால் பல உடல் நன்மைகள் கிடைக்கிறது. நமது ஊர்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது, நீர் மோர் பந்தலுடன், பானைக்கரம் என்ற புளிநீர் கொடுப்பார்கள். புளிசாறால் ஏற்படும் நன்மைகள் குறித்து இனி காண்போம்.

புளிச்சாறு குடித்தால் செரிமானம் அதிகரிக்கிறது. செரிமான பிரச்சனைகள் சரியாகிறது. அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. சிறிதளவு எடையை குறைக்க விரும்பும் நபர்கள், புளிசாறுகளை குடிக்கலாம். புளியில் உள்ள டையூரிடிக் உடலின் நச்சுக்கழிவுகளை வெளியேற்றுகிறது.

புளியில் உள்ள வைட்டமின் சி, சருமத்தின் அமைப்பை மேம்படுத்துகிறது. கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்து, இதயத்தை பாதுகாக்கிறது. அதிகளவு புளியை உடலில் சேர்ப்பதும் ஆபத்தானது தான். சந்தேகம் இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று புளிச்சாறு அருந்துவது நல்லது.