கர்ப்ப காலத்தில் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனை.!

கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் பெண்கள் இரவு வேளைகளில் அதிகளவு தூக்கத்தை இழக்கின்றனர். இரவு வேளைகளில் தூக்கம் கர்ப்பிணி பெண்களுக்கு பெரும் கேள்விக்குறியாக அமைகிறது. கர்ப்ப காலங்களில் தாய் மற்றும் குழந்தை குறைந்தபட்சம் 8 மணிநேரம் கட்டாயம் உறங்கியாகவேண்டும்.

குழந்தைகளின் பிறப்பு, வளர்ச்சி கட்டுப்பாடுகள் போன்ற விளைவுகளுக்கு, கர்ப்பிணி பெண்கள் ஓய்வு எடுக்காமல் இருப்பதும் காரணமாக அமைகிறது. இதனைப்போன்று அதிக நேர உறக்கமும் குழந்தையை பாதிக்கிறது. நாளொன்றுக்கு ஒன்பது மணிநேரத்திற்கு அதிகமாக உறங்கினால், குழந்தையின் உடல் நலம் பாதிக்கும்.

மேலும், கர்ப்பத்தால் வளர்ந்து வரும் வயிறு, பதற்றமான உடல் ரீதியான அசௌகரியம் கர்ப்பிணி பெண்களிடையே தூக்கத்தை சீர்குலைக்கிறது. தூக்க நேரத்தினையும் அதிகரிக்கிறது. ஹார்மோன்கள் பிரச்சனை காரணமாக கர்ப்பிணி பெண்கள் தூக்கமின்மையை சந்திக்கின்றனர்.

உடலில் புரோஜெஸ்டின் அளவு அதிகரித்தல், இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தின் வீழ்த்தி சோர்விற்கு வழிவகை செய்யும். இதனால் கர்ப்ப காலத்தில் பெண்கள் உறங்க விரும்புவார்கள். உணவுக்குழாய் அடிப்பகுதியில் உள்ள தளர்வான தசை வளையம் பெண்களுக்கு பொதுவான பிரச்சனையாக இருக்கிறது.

உணவுகள் மற்றும் திரவம் மீண்டும் தொண்டை பகுதிக்கு வர ஆசிட் ரிஃப்ளக்ஸ் வழிவகை செய்வதால், படுத்து உறங்க முயற்சிக்கையில் தூக்கத்தை சீர்குலைக்க செய்கிறது. இதனால் சுவாசிப்பதாலும் சிரமம் ஏற்பட்டு மூச்சுத்திணறலுக்கு வழிவகை செய்கிறது. கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கான பிரச்சனைகளை தெரிந்து அலட்சியமாக செயல்படாமல் இருக்க மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.