பொங்கல் பண்டிகை முடிந்த பின்னும் பலரும் கரும்பை சுவைத்து உண்பார்கள். ஆனால் கரும்பு தின்ற உடனேயே தண்ணீர் குடித்திருப்பார்கள்.
அதன் காரணமாக,வாய் முழுக்க நமைச்சல் எடுக்கும் சிறு கொப்புளங்கள் தோன்றியிருக்கும்.
கரும்பு சாப்பிட்டு முடித்து 15 நிமிடங்கள் கழிந்த பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஏனென்றால், “கரும்பில் சுண்ணாம்பு சத்து என்ற கால்சியம் அதிகம் உள்ளது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது.
அந்த சமயத்தில் தண்ணீர் குடிக்கும் போது அதிகமான சூட்டைக் கிளப்பும் எதிர்வினை நடக்கிறது. இதனால் நாக்கு வெந்து விடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.