நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு கலைஞன். ஆனால் அண்மையில் இவர் வெளியிட்ட தகவல் அவரது ரசிகர்களுக்கு பெறும் சோகத்தை வழங்கியது.
அதாவது தான் இனி அரசியலுக்கு வரவில்லை என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். முதலில் வருந்திய ரசிகர்கள் பின் அவரது உடல்நிலை தான் முக்கியம் என்று புரிந்துகொண்டனர்.
இந்த நிலையில் தான் ரஜினியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
90களில் நியூயார்க்கில் JummaChummaInNY என்ற ஷோ நடத்தப்பட்டதாம். அதில் அமிதாப் பச்சன், அனுபம் கேர், ஸ்ரீதேவி என பல பிரபலங்களுடன் ரஜினியும் அந்த ஷோவில் கலந்து கொண்டுள்ளார்.