கொரோனா வைரஸ் ஆனது உலகம் முழுவதும் 9 கோடியே 80 லட்சம் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 கோடி பேராக உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 21 லட்சத்து பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், இந்தியா, ரஷ்யா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் முதல்கட்டமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இதனிடையே, கனடாவின் வான்கூவரைச் சேர்ந்த சானோடைஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், நைட்ரிக் ஆக்சைட் நேசல் ஸ்பிரே எனும் ஒரு மருந்தை உருவாக்கியுள்ளது.
இந்த (என்.ஓ.என்.எஸ்) மருந்து 99.9 சதவீதம் செயல்திறன் மிக்கது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதனை அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இந்த பரிசோதனை தற்போது 2ம் கட்டத்தில் உள்ளது. இது நல்ல பலனை தருவதால், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, நைட்ரிக் ஆக்சைடை அடிப்படையாகக் கொண்ட இந்த மருந்தை மூக்கினுள் ஸ்ப்ரே செய்தால், கொரோனா வைரசானது நுரையீரலுக்குள் செல்வதற்கு முன்பாக அழித்துவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.