விஷாலின் சக்ரா திரைப்படமும் திரையரங்க ரிலிஸா?

விஷால் நடித்துள்ள சக்ரா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாவதாக இருந்த நிலையில் இப்போது திரையரங்கில் ரிலீஸாகும் முடிவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஷால் நடித்து எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. ஸ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்பட இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை ஓடிடி தளங்களுக்கு விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கான பேச்சுவார்த்தைக் கூட முடிந்த நிலையில் இப்போது கடைசி நேரத்தில் சக்ரா திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய விஷால் முடிவெடுத்துள்ளாராம். இதற்குக் காரணம் சமீபத்தில் தியேட்டரில் ரிலீஸாகி பெருவெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படமே என சொல்லப்படுகிறது.