பிக்பாஸ் வீட்டில் உருவாக கள்ளக்காதல்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் நெருங்கிப் பழகுவதை பார்த்த ரசிகர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபல இந்தி நடிகையான ராக்கி சாவந்த், இவர் தமிழில் கம்பீரம் படத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் பல படங்களில் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார்.

நடிகை ராக்கி சாவந்துக்கு ரித்தேஷ் என்பவருடன் ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது சல்மான்கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராக்கி கலந்த கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடிகை ராக்கி சாவந்துக்கும், சக போட்டியாளரான அபிநவ் சுக்லாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதுமின்றி அதனை அவரிடம் வெளிப்படுத்தவும் செய்துள்ளார்.

திருமணமான அபிநவும் அவருடன் நெருங்கிப் பழகி வருவதாகவும் கூறப்படுகின்றது. சமீபத்திய எபிசோடில் நடிகை ராக்கி சாவந்த் ‘ஐ லவ் யூ அபிநவ்’ என உடல் முழுக்க எழுதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் வீட்டில் அரங்கேறியுள்ள ராக்கி, அபிநவ் ஆகியோரின் கள்ளக்காதலை சல்மான் கான் ஏன் கண்டிக்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

டி.ஆர்.பி.க்காக கள்ளக்காதலை ஊக்குவிப்பதா என நெட்டிசன்கள் கடுமையாக குற்றம் சாட்டியதுடன், திட்டித்தீர்த்தும் வருகின்றனர்.