ரேகாவை போலவே அச்சு அசலாக இருக்கும்.. அவரது மகள்.!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேகா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து இருக்கின்றார்.

கடலோர கவிதைகள், புன்னகை மன்னன், எங்க ஊரு பாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் புரியாத புதிர் என்று பல்வேரு படத்தில் அவர் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பொழுதே கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை 1996ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் சினிமாவில் கால் தடம் பதிக்க ரேகா விரும்பி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவராலும் அடையாளம் காணப்பட்டார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரேகா தனது பெண்ணுடன் இருக்கின்ற புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு இருக்கின்றார். ரேகாவை போலவே பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் ரேகாவின் மகள் அனுஷாவை விரைவில் திரையில் பார்க்க வேண்டும் என்று ரேகாவின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.