ஹரி அருண் விஜய்யை வைத்து இயக்க போவதாக முன்னரே அறிவித்திருந்தார். இது அருண் விஜய்க்கு 33வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வழக்கமான ஹரி ஸ்டைலில் குடும்ப சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த கலவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்,விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது .
இந்நிலையில், சற்றுமுன்னர் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரம்ஸ்டிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இப்படத்தில் நடிகையாக அறிவித்துள்ளது. இதனையடுத்து, நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு சமூகவலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.