24 மணிநேரத்தில் அதிக பார்வைகளை குவித்த மாஸ்டர் பட பாடல், தென்னிந்திய அளவில் NO.1..

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று மக்கள் திரையரங்கிற்கு அலை மோதி வருகின்றனர். மேலும் இப்படம் ரூ.200 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே மாஸ்டர் படம் திரையரங்கில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், இன்று நள்ளிரவு 12 மணிக்கு அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நேற்று ரசிகர்கள் அனைவரும் அவ்வளோடு எதிர்பார்த்த வாத்தி கமிங் பாடல் வெளியானது, இதற்கு பேராதரவு கொடுத்துள்ள ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி வாத்தி கமிங் பாடல் 24 மணிநேரத்தில் 7 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது, இதனால் தற்போது தென்னிந்திய அளவில் இந்த பாடல் 24 மணிநேரத்தில் அதிக பார்வைகளை பெற்று NO.1 இடத்தில உள்ளது.