கன்னடத்தில் கேஜிஎப் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக இருக்கின்றது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது.
இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர் ஓகே சொல்லி விட்டால் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில், இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்து இருக்கின்றனர். சுருதிஹாசனின் பிறந்த நாளான இன்று படக்குழு இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடிகர் பிரபாஸ் நடிகை ஸ்ருதியும் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram