வெறும் 4 நிமிடத்தில் 1 கிலோ பிரியாணி சாப்பிட்ட இளைஞர்…

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் சின்னசேலத்தில் ஈட்டிங் சேலஞ்ச் பாய்ஸ் மற்றும் ஜே.சி.ஐ சின்னசேலம் அமைப்பு இணைந்து நடத்திய போட்டி மிகவும் பிரபலமாகியுள்ளது.

ஈட்டிங் சேலஞ்ச் பாய்ஸ் மற்றும் ஜே.சி.ஐ சின்னசேலம் அமைப்பு பத்து நிமிடத்தில் ஒரு கிலோ பிரியாணி சாப்பிட வேண்டுமென்ற போட்டியை நடத்தியது.

இந்த பிரியாணி திருவிழாவில் கலந்துகொண்டு பத்து நிமிடத்தில், ஒரு கிலோ பிரியாணி சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி காசு பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, போட்டியில் 30 நபர்களுக்கு மட்டுமே பரிசு தொகை என்று கூறியதை அடுத்து, முண்டியடித்து இளைஞர்கள் அங்கு சென்றனர். குறைந்த நேரத்தில் சாப்பிடும் மூன்று நபர்களுக்கு மட்டுமே பரிசுகள் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரியாணி திருவிழாவில் பலரும் கலந்துகொண்ட நிலையில், கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்(26) என்ற இளைஞர், நான்கரை நிமிடத்திற்குள் ஒரு கிலோ பிரியாணி சாப்பிட்டு முதல் பரிசான 10 கிராம் தங்க காசு மற்றும் கேடயத்தை பெற்று சென்றுள்ளார்.