சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனம் கவர்ந்த திறமையான பாடகிகளில் ஒருவர் சோனியா. முதல்வன் படத்தில் வந்த உளுந்து விதைக்கயில பாடலை நிகழ்ச்சியில் அவர் பாடியது இன்னும் ரசிகர்களின் மனதில் இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறது.
மலையாளத்திலும் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நல்ல குரல் வளும் திறமையும் கொண்ட இவர் தற்போது சினிமாவில் இசைக்கலைஞராக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் பிக்பாஸ் பிரபலமும் பாடகரான சோமதாஸ் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.
சோனியாவுக்கு கடந்த 2008 ல் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் சக போட்டியாளராக மிகவும் பிடித்த நபராக சோமதாஸ் இருந்தாராம். நாங்கள் இணைந்து பாடியது இன்னும் மனதில் அப்படியே இருக்கிறது.
நாடக கானம் சுற்றில் நாங்கள் Thalakku Meethe Shunyakasham பாடலை பாடினோம். இதில் இறப்பை பற்றி சோமதாஸ் அண்ணன் பாடி வரி கண்ணீரை வரவைத்து விட்டது. கண்ணீரில்லாமல் அப்பாடலை கேட்க முடியவில்லை என கூறியுள்ளார். திறமையான பாடகர் இறந்தது கவலையாக இருக்கிறது என சோனியா கூறியுள்ளார்.