அந்த மாஸ் ஹீரோவுடன் நடிக்க மறுத்த நயன்தாரா.! வெளியான காரணம்…

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிபர் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி இந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். சமீபத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியது.

இந்த திரைப் படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு படக்குழுவினர் நடிகை நயன்தாராவை அணுகியிருக்கின்றனர். ஆனால், நயன்தாரா இந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். இதன் காரணமாக நடிகர் சிரஞ்சீவி அப்செட் ஆகிவிட்டாராம்.

ஏற்கனவே சிரஞ்சீவி மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. எனவே, நயனை அணுக சிரஞ்சீவி முடிவு செய்திருந்தார். ஆனால், நயனதாரா இந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா லூசிபர் திரைப்படத்தில் நடிக்க மறுத்ததற்கு காரணங்கள் வெளியாகியவில்லை. ஆனால், லூசிபர் கதையில் ஹீரோயினுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் படி ஸ்கோப் இல்லை. எனவே, தான் நயன்தாரா அந்த படத்தை நிராகரித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.