நடிகர் விஜய் சேதுபதி நடிக்கின்ற வெப் சீரிஸ்க்கான அவருடைய சம்பளம் வியக்க வைக்கின்ற அளவுக்கு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கின்ற விஜய் சேதுபதி பல்வேறு திரைப்படங்களில் நடிகர் விஜயை விட அதிகமாக ஸ்கோர் செய்து இருக்கின்றார். இதன் காரணமாக விஜய் ரசிகர்களே கூட விஜய் சேதுபதியின் நடிப்பு குறித்து புகழ்பாட துவங்கினர்.
இதன் காரணமாக மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கின்றது. இத்தகைய சூழலில், விஜய் சேதுபதி தற்போது தாறுமாறாக சம்பளத்தை ஏற்றி இருக்கின்றாரா என்பதும் தெரியவில்லை.
இந்தியில் அவர் நடிக்கும் வெப் சீரிஸில் கதாநாயகனாக நடிக்கும் ஷாகித் கபூரை விட நடிகர் விஜய் சேதுபதி அதிக சம்பளம் பெறுகிறாராம். இந்த விஷயம் தற்போது கோலிவுட் தயாரிப்பாளர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளதாம்.