ஒருநாள் தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் அணியானது மே மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்த ஒருநாள் தொடரானது மூன்று போட்டிகள் கொண்டதாக அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை – வங்கதேசம் தொடரானது உலகக் கிண்ண சூப்பர் லீக்கின் ஒரு பகுதியாக இருக்கும் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் நடவடிக்கை தலைவர் அக்ரம் கான் பேசியுள்ளார்.
புதன்கிழமை பேட்டியளித்த அக்ரம் கான், உலகக் கிண்ண சூப்பர் லீக்கின் ஒரு பகுதியாக இருக்கும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இலங்கை அணி மே மாதம் வரும் என்று கூறியுள்ளார்.