நாம் நமது வாழ்வில் பல வகையான பிரியாணிகளை சுவைத்திருப்போம். ஆனால் உலகிலேயே விலை உயர்ந்த பிரியாணியை நாம் சுவைத்திருப்போமா? அது என்ன உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிரியாணி என நீங்கள் கேட்கலாம்.
துபாயில் ஒரு தட்டு பிரியாணியை இந்திய நாட்டு பண மதிப்பின் படி 20,000 ரூபாய்க்கு விற்று வருகிறது ஒரு உணவகம்.
இது கேட்கும்போது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். இந்த பிரியாணியை துபாயில் உள்ள ஒரு முக்கிய உணவகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் விலை காரணமாக உலகிலேயே அதிக விலை உள்ள பிரியாணி என இது அழைக்கப்படுகிறது. இந்த் பிரியாணியை துபாயில் உள்ள பம்பாய் போரோ என்ற உணவகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கிடைத்த தகவலின்ப்படி இந்த உணவகத்தின் உரிமையாளர் உணவகத்தின் முதல் ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில் இந்த பிரியாணியை மெனுவில் சேர்த்துள்ளார். இந்த பிரியாணியை ஒருவர் மட்டும் சாப்பிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
ஏனெனில் இங்கு பிரியாணி அதிகமாக உள்ளது. ஒரே நேரத்தில் ஆறு பேர் சேர்ந்து இந்த பிரியாணியை உண்ணலாம் என கூறப்படுகிறது. இந்த ராயல் பிரியாணியானது 23 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட தட்டில் பரிமாறப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த பிரியாணியில் காஷ்மீரி மட்டன் கபாப், பழைய டெல்லி மட்டன் சாப்ஸ், ராஜ்புத் சிக்கன் கே கபாப்ஸ், முகலாய் கேஃப்டே மற்றும் மலாய் சிக்கன் ஆகியவை அடங்கியுள்ளன.
இந்த உணவகம் சென்று பிரியாணியை நீங்கள் ஆர்டர் செய்தால் இது உங்களுக்கு கிடைக்க 45 நிமிடங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டி வரும். இந்த் பிரியாணியுடன் உங்களுக்கு ரைட்டா, கறி, சாஸ் போன்றவையும் வழங்கப்படும். எனவே நீங்கள் துபாயில் வசிப்பவர் என்றால் முடிந்தால் இந்த பிரியாணியை முயற்சி செய்து பார்க்கலாம்.