தாம் ஒரு பௌத்த தலைவன் என்றும், அதனை கூறுவதற்கு ஒருபோதும் தாம் பின்வாங்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்தார்.
இன்றையதினம் இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன் 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதுடன், மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலும் உடடினயாக நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
அதுமட்டும் அல்லாமல் நட்டில் ஊழலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொவிட் வைரஸ் குறித்த தடுப்பூசி திட்டம் தொடரும் என்று ஜனாதிபதி கூறினார்.
நாட்டின் பொருளாதார மையங்களை வெளிநாட்டினருக்கு விற்கக் கூடாது என்ற கொள்கையை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும், அதேவேளையில் இது தொடர்பான வதந்திகளை பரப்புபவர்களின் அடிப்படை நோக்கங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அதேபோல மத்திய வங்கி ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கும் விரைவில் தண்டனையளிப்பதாவும் ஜனாபதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ இதன்போது உறுதியளித்தார்.