சமையலில் உள்ள மசாலா பொருட்களில் பெருங்காயத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு.
காரணம் இது உணவிற்கு ஒரு வித்தியாசமான சுவையையும். மணத்தையும் அளிப்பதே ஆகும். சமைக்காத சமயங்களில் பெருங்காயத்தின் மணம் பலராலும் வெறுக்கத்தக்கத்தக்க அளவு இருக்கும் என்பதே உண்மை.
இதிலுள்ள மருத்துவ குணங்களால் பெருங்காயம் “கடவுளின் அமிர்தம்” என பல நாட்டு மக்களால் அழைக்கப்படுகிறது.
கிட்டதட்ட இதன் மணமானது வெங்காய இன பூண்டுகளின் மணத்தை தான் நியாபப்படுத்துகிறது. பெருங்காயத்தில் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து தான் நாம் இக்கட்டுரையில் காண்போம்.
பெருங்காயத்தின் மிக முக்கியமான செயல்பாடுகளின் ஒன்று செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதே ஆகும்.
ஆண்மைக்குறைவு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பெருங்காயம் ஒரு சிறந்த தீர்வை தருகிறது. நன்கு வெண்ணெயில் வறுக்கப்பட்ட பெருங்காய பொடியை தேனுடன் கலந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்குறைவு தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
இது ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாகவும், உணர்ச்சியை தூண்டும் தடுப்பானாகவும் செயல்படுவதால் வயிறு வீக்கம், வலி, குடற்புண், குடல் புழுக்கள், வாயு, வயிற்று எரிச்சல் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.
குறிப்பாக செரிமான பிரச்சனைகளில் உடனடி நிவாரணம் கிடைக்க சிறிது பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து குடித்தால் சரியாகும்.
பெருங்காயம் வயிற்றில் உள்ள என்சைம்களின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தி அமிலத்தன்மையை குறைப்பதால் இரைப்பை தொடர்பான பிரச்சனைகள் குணமாகிறது.
குறிப்பிட்ட நாளில் மாதவிடாய் ஏற்படாமல் தவிக்கும் பெண்கள் வாலேந்திர போளம், மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை அரைத்து சிறிய உருண்டையாக உருட்டி சாப்பிட்டால் ஒழுங்கான நாளில் மாதவிடாய் ஏற்படும்.
மேலும் சினைப்பை நீர்கட்டி பாதிப்பால் அவதிப்படும் பெண்களுக்கும் இது சிறந்த தீர்வு தருகிறது.
பெருங்காயம் ஒரு மன அழுத்தத்தை சீராக்கி என மருத்துவ உலகில் அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் மன அழுத்தத்தை போக்குவதில் முக்கிய பங்கு வகித்து அதனை சார்ந்த பல உடல் நல பாதிப்புகளான கருவுறாமை, தூக்கமின்மை ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது என்பதே ஆகும்.அதேபோல் பெருங்காயத்தில் உள்ள பெருளிக் அமிலம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் திறன் கொண்டது.