கொரோனாவால் கொழும்பு -3, பொகவந்தலாவை, நாவல, மட்டக்குளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் பலி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் இதுவரை 343 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 67 000 ஐ கடந்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணி வரை 729 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கயைம மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 67 844 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 61 461 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 5651 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிகளில், ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் இலங்கையர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.