மாஸ்டர் படம் ரசிகர்களை மிகவும் கொண்டாட வைத்துவிட்டது. வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் இன்னும் நிற்கவில்லை என்றே சொல்லலாம். ரசிகர்களும் இப்பாடலுக்கு வீடியோ செய்து வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி 13 ல் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இப்படம் 25ம் நாளை நோக்கி நடைபோட்டு வருகிறது. 50 சதவீத இருக்கைகள் மட்டுமே என்ற கண்டிசனுக்கிடையிலும் இப்படம் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலித்துவிட்டது.
இந்த கொண்டாட்டத்திற்கு இடையே மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது. விஜய் நடித்த சிவகாசி படத்தின் ஹிந்தி டப்பிங் Youtube ல் தற்போது 100 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது.