லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர்.
பொங்கலுக்கு வெளியான இப்படம் தற்போது வரை உலகளவில் சுமார் ரூ. 250 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனை செய்துள்ளது.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 141 கோடி வரை வசூல் செய்து பாகுபலி 2 படத்தின் தமிழக வசூலை முறியடித்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது மாஸ்டர்.
ஆம் பாகுபலி 2 தமிழகத்தில் மட்டும் ரூ. 80 கோடி வரை வசூல் செய்திருந்தது. அதனை ரூ. 141 கோடி வசூல் செய்து தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்துள்ளது.