சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் அரசியலுக்கு வரப்போவதில்லை என உடல் நிலையை காரணம் காட்டி வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.
பல குழப்பத்திற்கு நடுவே நிச்சயம் வருவேன் என அவர் கூறியிருந்ததும், எம்.ஜி.ஆரின் நாளில் கட்சியை தொடங்குவதாகவும், கட்சியின் பெயரை பதிவு செய்ததும் நினைவிருக்கும் தானே.
அண்ணாத்த படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு கொரோனா தொற்று பரவியதால் தன்னையும் பரிசோதித்து உடல் நிலை காரணத்தால் அரசியல் முடிவிலிருந்து விலகினார்.
இந்நிலையில் அவரின் ஆதரவு யாருக்கு என கேள்வி எழுந்து வந்தது? மக்கள் நீதி மய்யம் கமல் ஹாசன், பிஜேபி கட்சியினர் என பலரும் அவரின் ஆதரவை எதிர்பார்த்த நிலையில் தற்போது ரஜினி தரப்பு வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.
மேலும் இந்த தேர்தலுக்கு 100 சதவீதம் ரஜினி வரமாட்டார், அவரின் மனைவி லதா கட்சி தொடங்கவுள்ளதாக கூறிய தகவல் உண்மையில்லை என்றும் அத்தரப்பு தெரிவித்துள்ளது.