ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் அர்ச்சனா.
அதனை தொடர்ந்து சில ஆண்டுகளாக இடைவெளி விட்டிருந்த அவர் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபல தொகுப்பாளினியாக கொடிகட்டி பறந்தார்.மேலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
ஆனால, நாளடைவில் ஒரு சில காரணங்களால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து விலகிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு மோசமான விமர்சனங்களே எழுந்தன.
இந்நிலையில், அர்ச்சனா மீண்டும் தொகுப்பாளினியாக அவதாரம் எடுக்கவுள்ளார்.
அதாவது விஜய்தொலைக்காட்சியில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒளிபரப்பாகவிருக்கும் காதலா காதலா என்ற புதிய காதல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் என கூறப்படுகிறது.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.