ஆபாச படம் எடுத்த பேய்கள் ஜாக்கிரதை படம் நடிகை கைது.! வெளியான முக்கிய தகவல்!

தமிழில் 2016ஆம் ஆண்டு திரைக்கு வந்த பேய்கள் ஜாக்கிரதை படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் கெஹனா வசிஸ்த். இவர் ஏராளமான இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

சமீபத்தில் நடிகை கெஹனா வசிஸ்த் ஆன்லைன் சேனல் ஒன்று தொடங்கி, அதில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்த படங்களை பார்க்க 2000 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சேனலில் பலர் கட்டணம் செலுத்தி படம் பார்த்துள்ளனர்.

இதற்காக மும்பை மலாட் மல்வானி பகுதியில் உள்ள தனியார் பங்களாவில் இளம்பெண்களை வைத்து ஆபாச படங்களை தயாரித்து வந்துள்ளார். இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரில், அந்த பங்களாவில் சோதனை நடத்திய காவல்துறையினர், அங்கிருந்த இரண்டு ஆபாச பட நடிகர்கள், ஒரு பெண் புகைப்படக் கலைஞர், நடிகை கெஹனா வசிஸ்த், இளம் பெண் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், விசாரணையில் இதுவரை 87 ஆபாச வீடியோக்களை தயாரித்து பதிவேற்றுவது தெரிய வந்துள்ளது. ஆபாச படம் தயாரித்து நடிகை கெஹனா வசிஸ்த் கைதாகி இருப்பது திரைத்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.