தளபதி 65 படத்தில் விஜய்யுடன் இணைந்து குக் வித் கோமாளி பிரபலம்.. யார் அந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் அடுத்தாக மிகவும் பிரபமாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தான் தளபதி 65.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிருவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. மேலும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோடியாக நடிக்க போவது பூஜா ஹேக்டே என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் புகழ் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

இந்த தகவல் தற்போது பெரிதும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் தளபதி 65 படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை..