எல்லாம் நடிப்பா கோபால்?.. வைரல் வீடியோ காட்சிகளின் உண்மை..

போட்டோகிராபர் பெண்ணை மட்டும் அதிகளவில் போட்டோ எடுத்ததால், ஆத்திரமடைந்த மணமகன் மேடையிலேயே தாக்கிய நிலையில், இதனை சற்றும் எதிர்பாராத மணமகள் விழுந்து சிரித்தது குறித்த காணொளி வைரலாகி வந்தது.

இது குறித்த வீடியோ காட்சியில், மணமக்கள் மேடையில் நின்று கொண்டு இருக்கிறார்கள். அங்கு, போட்டோகிராபர் முதலில் தம்பதிகளை புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில், பின்னர் மணப்பெண்ணை பல விதமான முக பாவனையுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.


ஒரு சமயத்தில், இதனைக்கண்டு ஆத்திரமடைந்த மணமகன், போட்டோ கிராபரை மேடையிலேயே வைத்து அடிக்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத மணப்பெண், கீழே விழுந்து சிரிக்கும் வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்நிலையில், இந்த வீடியோ காட்சிகள் படப்பிடிப்பில் படமாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த வீடியோவில் நடித்த பெண்மணி சத்திஷ்கரை சார்ந்த அணிகிரிதி சவுகான் என்பதும், இவர் “டார்லிங் பியர் ஜூக்தா நஹி” என்ற படத்தில் நடிக்கையில் திருமண காட்சிகள் பதிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.