சூர்யாவுக்கு கொரோனா ஏற்பட காரணம் இது தானா.!?

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலானது உலகம் முழுவதும் வாட்டி எடுத்த நிலையில் இந்தியாவில் ஓரளவு உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் அளவிலேயே கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் சில முக்கிய பிரமுகர்கள் உட்பட பலரும் உயிரிழக்க நேரிட்டது. தமிழ்த் திரையுலகிலும் சில உயிரிழப்புகள் ஏற்படுத்தியது.

தற்போது தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்பு, தியேட்டர் திறப்பு என ஓரளவு சினிமா பணிகள் தொடங்கிய நிலையில் நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்ததாகவும் தற்போது சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தற்போது சூர்யாவுக்கு கொரோனா ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் சூர்யா தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு சென்று கை குலுக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு இது தான் சூர்யாவுக்கு கொரோனா பரவ காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.