தனுஷுடன் பணியாற்றிய அனுபவம்.! மாளவிகா..

பேட்டை மற்றும் மாஸ்டர் திரைப்படங்களில் நடித்து இருக்கும் மாளவிகா மோகனன் அடுத்தபடியாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற தனுஷின் 43வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

இதில், ஸ்மிருதி, சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். கடந்த ஜனவரி 8ஆம் தேதி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கின்றது. இத்தகைய சூழலில், நடிகை மாளவிகா மோகனன் தான் தனுஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும், தனுஷுடன் தான் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.