பிரியா பவானி சங்கரின் வித்தியாசமான போட்டோஷூட்.!

சின்னத்திரையில் இருந்து பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகள் வெள்ளித்திரைக்கு வருவது வாடிக்கையாக மாறிவிட்டது. அந்தவகையில், செய்தியாளராக இருந்து பின்னர் சீரியல் நடிகையாக மக்கள் மனதில் இடம் பெற்று வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

தனது நடிப்புத் திறமையால் இவர் தற்போது வெள்ளித்திரையில் மிகப்பெரிய வெற்றியை கொண்டாடி வருகிறார். இந்த வருடம் பிரியா பவானி சங்கருக்கு சொந்தம் என்று கூறினால், அது மிகையாகாது. அந்த அளவிற்கு பல படங்களில் நடிகை பிரியா பவானி சங்கர் கமிட்டாகியிருக்கிறார்.

தற்போது, அவரது நடிப்பில், ‘களத்தில் சந்திப்போம்’ என்ற திரைப்படம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இந்த திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை தொடர்ந்து சிம்புவின் பத்து தல மற்றும் ஹரி இயக்கும் ஒரு திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இத்தகைய சூழலில், அன்றாடம் போட்டோ ஷூட் நடத்திய தனது சமூக வலைதளப் பக்கங்களில் அதை வெளியிட்டு வரும் பிரியா பவானி சங்கர் பட்டு புடவை ஒன்றை உடுத்தி போட்டோ ஷூட் நடத்தி, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.