பேரழிவு அழிவின் ஆரம்பமா? பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்!

பூமியை நோக்கி ராட்சத விண்கல் ஒன்று வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2001 FO32 என அழைக்கப்படும் இந்த விண்கல் மார்ச் 21ஆம் திகதியன்று பூமியை நெருங்கிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியை கடந்து செல்லும் இந்த விண்கலினால் ஆபத்து ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

மேலும் கடந்த சில வருடங்களில் பூமியை கடந்து சென்ற சிறுகோள்களில் இதுவே மிகவும் அருகில் கடக்க உள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.

இந்த நிலையில் விஞ்ஞானிகளினால் ஒரு கிலோமீட்டர் விட்டத்துக்கு மேல் பெரிய விண்கற்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன் விண்கல் அடிக்கடி பூமி அருகே வந்துபோவதால் மிக ஆபத்தான விண்கல் என நாசா விண்வெளி ஆய்வு மையம் கூறுகிறது.