நடிகையின் புகைப்படத்தை படுகேவளமாக மார்ஃபிங் செய்த நெட்டிசன்கள்!

நடிகைகளுக்கு எதிராக பாலியல் அத்துமீறல்கள் நடைபெற்று வருவதோடு, சமுகவலைத்தளத்தில் மோசமாக புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தின் நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை மாதவி லதா.

சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாகவும் இதை தீவிரமாக விசாரிக்கவும் சர்ச்சையாக பேசியிருந்தார். இதையடுத்து சமீபத்தில் கோவில்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் பற்றியும் பேசியிருந்தார்.

தற்போது சைபராபாத் போலிசில் தன் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து அசிங்கப்படுத்தி வருவதாகவும் அவதூறாக பேசி என் நடத்தை பற்றி கேவளமாக பேசியும் வருகிறார்கள் என்று புகாரளித்துள்ளார்.

இதற்கு காரணம் ஆந்திராவில் கோயில்களுக்கு எதிரான தாக்குதல்களுக்காகக் குரல் கொடுத்தேன். இதற்கு பிறகு முகம் தெரியாத சிலர், வெறுக்கத்தக்க கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். எனது புகைப்படத்தை மார்பிங் செய்து பதிவேற்றி வருகின்றனர்.

மேலும் இதை பப்ளிசிட்டிக்காகவும் செய்து வருவதாக கூறி வருகிறார்கள். ஆமாம் பப்ளிசிட்டிக்காகவும் பரபரப்புக்காகவும் தான் இதை செய்து வருகிறேன் என்று பேட்டியில் கூறியுள்ளார். நான் விளம்பரம் தேடுகிறேன் என்பதை மறுக்கவில்லை.

எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால், கவனத்தை ஈர்க்க இதை செய்கிறேன். நான் சமூக சேவை மற்றும் உதவிகள் செய்யும்போது, அது மீடியாவில் வரவேண்டும் என்று நினைக்கிறேன். அதைப் பார்த்து மற்றவர்களும் அதை செய்வார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது.