தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பல வியூகங்களை வகுத்து மக்களை சந்தித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
— Oviyaa (@OviyaaSweetz) February 13, 2021
இதனிடையே பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் சென்னை வந்தபோது ட்வீட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டிங் செய்யப்பட்டது. அப்போது நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டாக்கை பதிவிட்டு பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். இதற்கு பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஒரே ட்வீட்டில் மொத்த பாஜகவினரை அலறவைத்த ஓவியாவுக்கு திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. திமுகவின் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் ஐ-பேக் நிறுவனம் ஒரு கோடி சம்பளம் கொடுத்து திமுகவிற்கு பிரச்சாரம் செய்ய ஓவியாவை அமர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளிவரவில்லை.