சனம் காதலிக்கும் மோனி இவர் தான்… பிக்பாஸிலேயே காதலைக் கூறியுள்ள சனம்!

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் தான் சனம் ஷெட்டி.

மொடலிங் துறையில் இருக்கும் இவர் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரான தர்ஷனைக் காதலித்தது மட்டுமின்றி, அவருடன் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

ஆனால் தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளியே வந்த பின்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இவர்களின் பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் காதலர் தினத்தன்று இவர் வெளியிட்ட புகைப்படம் தீயாய் பரவியது. நபர் ஒருவரின் கையைப் பிடித்தவாறு புகைப்படத்தை வெளியிட்டு, என் உலகத்தை பிரகாசமாக்கி விட்டாய் மோனி…. காதலர் தின டின்னருக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்.


தற்போது குறித்த நபர் யார் என்ற விபரத்தினை சனம் ஏற்கெனவே பிக்பாஸில் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் போது கூறியுள்ள காணொளியினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், மோனி தன்னுடைய கடினமான காலங்களில் தன்னுடன் இருந்ததாகவும், அவர் என்னுடைய நல்ல நண்பர் தான். ஆனால், அவர் அதை விட முக்கியமானவர் என்று கூறி இருந்தார்.

அதே போல சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் பிறந்தநாளை கொண்டாடிய போது கூட மோனி, வாழ்த்து அட்டை ஒன்றை அனுப்பிய போது ஐ மிஸ் யூ, ஐ லவ் யூ என்று அப்போதே தனது காதலை சொல்லியுள்ளார் சனம்.