பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் செம்பருத்தி, இதில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் கார்த்திக்.
மேலும் அவருக்கு ஜோடியாக ஷபானா ஷாஜகான் நடித்து வந்தார். இந்த ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
இதனிடையே சென்ற வருடம் கார்த்திக் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார், அவருக்கு பதில் தற்போது ஆதி கதாபாத்திரத்தில் அக்னி என்பவர் அதில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கார்த்திக் தற்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர்களின் ரசிகர்களை எச்சரித்துள்ளார். ஆம், அதில் இன்ஸ்டாகிராமைத் தவிர ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் தான் இல்லை என்றும் போலியான அக்கவுண்ட்கள் மீது புகாரளிக்குமாறு தெரிவித்துள்ளார்.