மகளின் விளையாட்டை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்த தளபதி விஜய்..!

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கும் என தகவல் வெளியாகியது, மேலும் அண்மையில் இப்படத்தின் டெஸ்ட் லுக் நடைபெற்றது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தளபதி விஜய் அரிதான சில புகைப்படங்கள் வெளியாகி வருகிறது, அந்த வகையில் தற்போது நாம் பலரும் பார்த்திராத நடிகர் விஜய் அவரின் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த பேட்மிட்டன் போட்டியில் நடிகர் விஜய்யின் மகள் திவ்யா ஷாஷாவும் விளையாடியுள்ளார். அப்போது நடிகர் விஜய் மற்றும் அவரின் மனைவி இருவரும் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

https://twitter.com/deviarunassalam/status/1361866381671587840