மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷிற்கும் வில்லனான முக்கிய நடிகர், வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு..!

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் மாஸ்டர் மகேந்திரன்.

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மகேந்திரன் அடுத்ததாக தனுஷ் உடன் D43 படத்தில் நடிக்கவுள்ளார்.

ஆம், இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படத்திலும் அவர் வில்லனா அல்லது முக்கிய கதாபாத்திரமா என்பதை பொறுத்திருந்து பார்போம்.