மயோனைஸ் என்பது துரித உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதாகும். இந்த மயோனைஸை சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலையில், சான்விட்ச், பர்கர், கிரில் சிக்கன் போன்ற துரித உணவுகளின் சுவைக்காக இதனை சாப்பிட்டு வருகின்றனர்.
மயோனைஸ் என்பது முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சை சாறு, எண்ணெய், சர்க்கரை, உப்பு போன்ற பொருட்களை பயன்படுத்தி தயார் செய்து வருகின்றனர். இதில் பாக்டீரியாக்கள் எளிதில் இனப்பெருக்கம் அடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இதனை தயாரித்து சரியாக சேமித்து வைக்காது இருக்கும் பட்சத்தில், ஒரு நாளுக்கு உள்ளாகவே கிருமிகள் இனப்பெருக்கம் அடைவதாகவும், இது உடலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும், கடைகளில் விற்பனை செய்யப்படும் மயோனைஸுல் பதப்படுத்தும் மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டு, இது சிலருக்கு பலவிதமான உடல் உபாதைகளும் ஏற்படுத்துகிறது.
மயோனைஸை அதிகளவில் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய், கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இதில் இருக்கும் அதிக கொழுப்பால், உடலின் கலோரி அளவு அதிகரிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.