தோசையை போல சப்பாத்தியிலும் பல விதமான சப்பாத்தியை செய்யலாம். அந்த வகையில், உடலுக்கு ஆரோக்கியமான காலை உணவிற்கு ஏற்ற வகையில் செய்ய கூடிய பூசணிக்காய் சப்பாத்தி செய்வது எப்படி என இனி காணலாம்.
பூசணிக்காய் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:
துருவிய சிவப்பு பூசணிக்காய் – 2 கிண்ணம்,
கோதுமை மாவு – 3 கிண்ணம்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட வாணெலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி, துருவிய சிவப்பு பூசணியை மூன்று முதல் 5 நிமிடம் வரை வதக்கி இறக்க வேண்டும்.
பின்னர் பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, வதக்கிய பூசணி துருவலை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
இதன்பின்னர், தோசைக்கல் காய்ந்ததும் வழக்கமான சப்பாத்தியை போல சுட்டு எடுத்தால் சுவையான மற்றும் சத்தான சப்பாத்தி தயார்.