பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்போது மெகா சங்கமம் நடந்து வருகிறது. பாக்கியலட்சுமி சீரியல் குழுவினருடன் சங்கமம் நடந்துள்ளது.
கடந்த சில நாட்களாக அப்படி தான் கதை ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சங்கமம் கொஞ்சம் போர் அடிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த வாரத்துடன் இந்த மெகா சங்கமம் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர்-முல்லை வேடத்தில் நடிக்கும் குமரன், காவ்யா படப்பிடிப்பை தாண்டி மாடர்ன் உடையில் ஒரு புகைப்படம் எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படம் இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.