தனுஷ் படத்தில் கைகோர்க்கும் மாஸ்டர் பவானி.!

தளபதி விஜய் நடிப்பில்இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் தான் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் பலருக்கு மாஸ்டர் படம் அடையாளம் கொடுத்தது. மேலும் ஒரு சில நடிகர்களின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.

படத்தில் கதாநாயகனாக நடித்த விஜயின் கதாபாத்திரத்தை விட நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்பது உண்மை. ஆனால், விஜய்சேதுபதி நடிப்பை விட குட்டி பவனியாக நடித்த மகேந்திரன் தான் பலரையும் கவர்ந்து இழுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை நட்சத்திரமாக ஒரு சில திரைப்படங்களில் மகேந்திரன் நடித்திருந்தாலும் கூட, வளர்ந்ததும் சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார்.

இத்தகைய சூழலில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் அவர் குட்டி பவனியாக நடித்து அசத்தி இருந்தார். இதனால், தற்போது நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகின்ற தனுஷின் 43வது படத்தில் மகேந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இது குறித்து ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். மாஸ்டர் திரைப்படத்திற்குப் பின்னர் விஜய் சேதுபதியின் மார்க்கெட் உயர்ந்தது. அதே வகையில் மகேந்திரனின் மார்க்கெட்டும் தற்போது உயர்ந்து இருப்பது பலரையும் வியக்க செய்துள்ளது.