சினிமாவில் தற்போது இளம் நடிகைகளுக்கும் முன்னணி நடிகைகளுக்கும் இல்லாத மார்க்கெட் 40 வயதான நடிகைகளின் தேவை அதிகரிக்கிறது. குணச்சித்திர கதாபாத்திரத்தில் அவர்களுக்கென்றே தனி மவுஸ் இருக்கும்.
அந்தவகையில் அப்படியான கதாபாத்திரத்தில் நடிக்காமல் தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக இருந்து பிரபலமானவர் நடிகை கஸ்தூரி. 45 வயதாகும் இவர் படவாய்ப்பில்லாமல் பல ஆண்டுகள் இருந்தார். படங்கள் இல்லாததால் சமுகவலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.
சமுக பிரச்சனைகள், பெண்ணியம் சார்பாக பேசுவது போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் கலந்துகொண்டு 20 நாட்களிலேயே வீட்டிலிருந்து வெளியேறினார். இதையடுத்து தொலைக்காட்சி தொடர்களில் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினாலும் பல சர்ச்சை கருத்துகளை முன் வைத்து வந்தார். அதில் வனிதாவுடனான சண்டைதான் அதிகமாக இருந்து வருகிறது. மேலும், தனக்கு என்று சமூக வலைதளத்தில் தனி இடத்தை பிடித்திருக்கும் கஸ்தூரி, இந்த கொரோனா காலத்தில் திடீரென்று எடுத்திருக்கும் கவர்ச்சி அவதாரம் சற்று பீதியை கிளப்பியிருக்கிறது.
அவ்வப்போது கவர்ச்சியையும் இடையில் கோர்த்து விட்டு வருகிறார். தற்போது இளம் வயதில் பருவ பெண்ணாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
View this post on Instagram