பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 ஐ ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். கடந்த இரண்டு சீசன்களிலும் இல்லாதளவில் இந்த சீசன் 3 ல் வெளிநாட்டு நபர்களும் போட்டியாளர்களாக பங்கெடுத்துக்கொண்டார்கள்.
இதில் மலேசியாவை சேர்ந்த முகென், இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷன். மாடலிங் , நடிகரான தர்ஷனின் பழக்க வழக்கங்கள் அணுகுமுறை அனைவருக்கும் பிடித்து போக அவருக்கு கடைசி வரை ரசிகர்களும் மக்களும் ஆதரவளித்து வந்தனர்.
அவர் தான் வெற்றியாளர் என நினைத்த நிலையில் முகெனுக்கு பிக்பாஸ் பட்டம் சென்றது. நண்பனுக்கு டைட்டில் கிடைத்ததால் தர்ஷணுக்கும் மகிழ்ச்சி தான்.
ஆனாலும் ரசிகர்களுக்கு நிர்வாகம் மீது கடும் கோபம். பிக்பாஸ்க்கு பின் எதிர்பாராத வகையில் நடிகை சனம் ஷெட்டியுடன் காதல் பிரிவு ஏற்பட்டது பெரும் சர்ச்சையானது. ஆனாலும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சனம் ஷெட்டிக்கு தர்ஷண் வாழ்த்துக்களும் அண்மையில் கூறியிருந்தார்.
தாய்க்கு பின் தாரம் என அவரின் நடிப்பில் ஒரு பாடல் வீடியோ அண்மையில் வெளியானது.
1 Lakh views in 1 Day!
Thank you for this love !
For those who’ve missed #தாய்க்குப்பின்தாரம் #ThaaikuPinThaaram Video👉🏻 https://t.co/SHI32XqZS0#DwarkaStudios#BlazeKannan@TharshanShant #Aayeesha@HaricharanMusic
@RJVijayOfficial @rajeshyadavdop@teamaimpr pic.twitter.com/XjYoETyuo9— Dharan kumar (@dharankumar_c) February 17, 2021