நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவை அனைவருக்கும் தெரியுமா தானே. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள அவர் கடந்த சில வருடங்களாக பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.
அர்ஜூனின் தங்கை மகனான சிரஞ்சீவி சார்ஜா இறந்தது இன்னும் அவரின் குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சி தான். சிரஞ்சீவியின் தம்பி துருவா தமிழில் இன்று வெளியாகியுள்ள செம திமிரு படத்தில் நடித்துள்ளார்.
உறவுக்கு தான் மருமகனே தவிர துருவா என் மகன் போல தான் என கூறுகிறார் அர்ஜூன். துருவாவுக்கு நடிப்பு, சண்டை பயிற்சிகள் கற்றுக்கொடுத்தது அர்ஜூன் தானாம்.
7 வருடங்களாக நடித்து வரும் துருவா ஹிட் படங்களும் கொடுத்துள்ளாராம்.
ஐஸ்வர்யாவுக்கு துருவா முறைப்பையன் என்பதால் இருவரையும் இணைந்து ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வைக்க விரும்பிய அர்ஜூன், இதை பற்றி தன் மகளிடம் கூறியபோது கோபித்துக்கொண்டாராம்.
மேலும் ஐஸ்வர்யா, துருவாவும் நானும் சகோதர சகோதரியாக பழகி வருகிறோம். நாங்கள் எப்படி சேர்ந்து நடிக்க முடியும் என்று கூறிவிட்டாராம்.